இவாங்கா டிரம்ப்புக்கு கொரானா.. வெள்ளை மாளிகை விளக்கம்

0 19098

ஆஸ்திரேலிய அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு (Peter Dutton) கொரானா பாதித்திருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, கடந்த வாரத்தில் அவரை சந்தித்த இவாங்கா டிரம்ப் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார்.

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசியிருந்தார்.

இந்நிலையில், தனக்கு கொரானா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பீட்டர் டட்டன் நேற்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து இவாங்கா டிரம்ப், வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார்.

இவாங்காவுக்கு கொரானா அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும், அவர் தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பில் வைக்கப்படவில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments