திராவிடர் விடுதலைக் கழகத்தினர் செய்து வைத்த காதல் திருமணம் முறிவு !

0 1800

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகளால் காதல் திருமணம் செய்து வைக்கப்பட்ட இளம் பெண் இளமதி தனது பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த ஒரு சமுதாயத்தை சேர்ந்த இளம்பெண் இளமதிக்கும், வேறு சமூகத்தை சேர்ந்த செல்வன் என்ற இளைஞருக்கும் மேட்டூரை அடுத்த காவலாண்டியூரில் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகியான ஈஸ்வரன் உள்ளிட்டோர் திருமணம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் 40 பேருடன் காவலாண்டியூருக்கு வந்த பெண்ணின் தந்தை ஜெகநாதன், தனது மகளை அங்கிருந்து அழைத்துச் சென்றார். அதே சமயம் காதல் திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகியை கடத்தியதாக பெண்ணின் தந்தை உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே தந்தையால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளமதி மேட்டூர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவர் பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக இளமதியுடன் காவல் நிலையத்துக்கு வந்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments