வௌவால், நாய், பூனைனு ஒண்ணுத்தையும் விடறதில்ல..! சீனர்கள் மீது பாய்ந்த அக்தர்..

0 35863

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வூகானில் இருந்து உருவாகி பல நாடுகளுக்கும் பரவி உள்ளதாக சீனாவின் மீது பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தரும் சீனா மீது குற்றம்சாட்டி தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்.

தங்கள் மீதான புகாரை சீனா மறுத்தாலும், அந்நாட்டு மக்களின் உணவு பழக்க முறை காரணமாகவே இந்த உயிர்கொல்லி பரவி இருக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் கொரோனாவை பரப்பியதன் மூலம் சீனா உலகத்தையே பணயம் வைத்துள்ளதாக அக்தர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சீனர்களை சாடும் வகையில் பேசியுள்ள அக்தர், நீங்கள் ஏன் வெளவால்கள், நாய்கள், பூனைகள் போன்றவற்றை சாப்பிடுகிறீர்கள், ஏன் அவற்றின் ரத்தத்தையும் குடிக்கிறீர்கள். பின்னர் ஏன் கொடிய உயிர்கொல்லி வைரஸ்களை உலகம் முழுவதும் பரப்புகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். உங்களின் வித்தியாசமான உணவு பழக்கத்தினால் நான் மிகவும் கோபமாக இருக்கிறேன்.

உங்களின் மோசமான உணவு பழக்கத்தால் ஒட்டு மொத்த உலகமும் ஆபத்தின் பிடியில் உள்ளது. உலகம் முழுவதும் சுற்றுலாத் துறை, பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை கூறுவதால் நான் சீன மக்களுக்கு எதிரானவன் அல்ல. கண்ணில் படுபவற்றை எல்லாம் உண்பது சீனர்களின் கலாச்சாரமாக இருக்கலாம். ஆனால் தற்போதைய சூழலில் அது உங்களுக்கு பலன் தரவில்லை. மனித குலத்தையே நாசமாக்கி வருகிறது.

சீன உணவுகளை புறக்கணிக்க சொல்லவில்லை. ஆனால் எதை சாப்பிட வேண்டும் சாப்பிட கூடாது என்பதை பற்றிய ஒரு தெளிவு வேண்டும். நீங்கள் எல்லா நேரத்திலும், எல்லாவற்றையும் சாப்பிட முடியாது என்பதை உணர வேண்டும் என பொரிந்து தள்ளியுள்ளார் அக்தர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments