இந்திய தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுக்கு கட்டுப்பாடு தளர்வு

0 983

இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த டுவிட்டரில் அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் வீட்டில் இருந்த படியே பணியாற்றுமாறு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த தாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இதனை மறுபரீசிலனை செய்து அடுத்த மாதம் 30ந்தேதி வரை அவர்கள் அலுவலகத்திற்கு சென்று பணியாற்றலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் ரவிசங்கர் பிரசாத் கேட்டு கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments