உருளைக்கிழங்கு மூட்டைக்குள் பாம்பு..!

0 1374

ஆஸ்திரேலியாவில் பிரபல சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வாங்கிய உருளைக்கிழங்கு மூட்டைக்குள், உயிருடன் பாம்பு இருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இயங்கி வரும் வூல்வொர்த்ஸ் எனும் பிரபல சூப்பர் மார்க்கெட் நிறுவனக் கிளையில் இருந்து, மரிசா டேவிட்சன் என்ற பெண் 4 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டையை வாங்கியுள்ளார். மூட்டையை பிரித்த போது அதிலிருந்து, பாம்பு ஒன்று வெளியேறி வீட்டினுள் நாலாபுறமும் ஓடியுள்ளது.

அதனை பார்த்து அச்சமடைந்தாலும், வீட்டிலிருந்த கம்பை கொண்டு பாம்பை அடித்துள்ளார். மேலும் உருளைக்கிழங்கு மூட்டையையும், பாம்பையும் புகைப்படம் எடுத்து வூல்வொர்த்ஸ் நிறுவன முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து அந்நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments