அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வழங்கும் முறை குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

0 709

அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளை நேரம் மற்றும் உணவுக்கு முன் - பின் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு ஏன் வழங்குவதில்லை என தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மருத்துவர்கள் நோயாளியை பரிசோதித்த பின் காலை, மதியம், இரவு, உணவுக்கு முன், பின் உட்கொள்ள அறிவுறுத்தி மருந்துகளை வழங்குவதாகவும், ஆனால் மருந்தாளுனர்கள் அனைத்தையும் உரிய குறிப்புகளின்றி ஒரே உறையில் போட்டு வழங்குவதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இதனால் கல்வியறிவு அற்றவர்கள் முறையாக மருந்துகளை எடுத்துக்கொள்ள இயலாத நிலை நிலவுவதாகவும் கூறியுள்ள அவர், மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்துக் கொள்ளாவிட்டால் நோய் குணமாக வாய்ப்பில்லை என்று தெவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments