ம.பி.யில் வரும் திங்கள் கிழமை நம்பிக்கை இல்லா தீர்மானம்

0 804

மத்திய பிரதேச காங்கிரஸ் அரசுக்கு எதிராக, வரும் திங்கள் கிழமை, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரசில் இருந்து விலகி நேற்று பாஜகவில் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் மாநில ஆளுநருக்கும், சட்டசபை சபாநாயகருக்கும் ராஜினாமா கடிதங்களை அளித்துள்ளனர். இதன் மீது சபாநாயகர் என்ன முடிவெடுப்பார் என்ன எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், வரும் 16 ஆம் தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிக்கிறது. அன்றைய தினம் கமல் நாத் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என பாஜக தலைமை கொறடா நரோத்தம் மிஸ்ரா போபாலில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஹோலி விடுமுறைக்குப் பின்னர் போபால் திரும்பியுள்ள ஆளுநர் லால்ஜி தாண்டனை, முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக குழுவினர் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments