செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் முன்பே தான் இறந்துவிடக்கூடும் - எலன்மஸ்க் கவலை

0 2985

செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் தனது இலக்கை அடைவதற்குள் தான் இறந்துவிடக்கூடும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன சிஇஓ எலன் மஸ்க் கவலை தெரிவித்துள்ளார்.

நாசாவின் சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதல் திட்டம், கடும் இழுபறிக்கு பின்னர் நடப்பாண்டு இறுதியில் நிறைவேறவுள்ளது.

இந்நிலையில் வாஷிங்டனில் நடைபெற்ற சாட்டிலைட் 2020 எனும் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அந்நிறுவன சிஇஓ எலன் மஸ்க், சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்ப தயாராவதற்கே 18 ஆண்டுகள் ஆகியிருப்பதாகவும், இந்த வேகத்தில் சென்றால் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் நிறைவேறுவதற்குள் தான் இறந்துவிடக் கூடும் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments