பாஜகவில் இணைந்தார் ஜூனியர் சிந்தியா..!

0 1940

காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகிய ஜோதிராதித்ய சிந்தியா இன்று பாஜக வில் சேர்ந்தார். 

டெல்லி பாஜக தலைமையகத்திற்கு வந்த சிந்தியாவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பூங்கொடுத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றார்.

அதன் பின்னர் ஜோதிராதித்ய சிந்தியா பாஜக வில் அதிகாரப்பூர்வமாக இணைந்ததை குறிக்கும் வகையிலான உறுப்பினர் குறிப்பை அவரிடம் ஜே.பி. நட்டா வழங்கினார்.

பின்னர் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நட்டா, ஜனசங்கத்தை உருவாக்கியதில் ஜோதிராதித்ய சிந்தியாவின் பாட்டி விஜயராஜே சிந்தியாவின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார். பாஜக வில் சுதந்திரமாக செயல்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு அளிக்கப்படும் என்றார் அவர்.

தம்மை பாஜகவில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு ஜோதிராதித்ய சிந்தியா நன்றி தெரிவித்துக் கொண்டார். 18 ஆண்டுகள் மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியில் இருந்த சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதை அடுத்து மத்திய பிரதேச சட்டமன்றத்தில் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு பாஜகவின் பிரிதிவிராஜ் சிங் சவுகான் 4 ஆவது முறையாக முதலமைச்சராவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா மாநிலங்களவை எம்.பி. யாகி. மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் இருந்து பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்களாக ஜோதிராதித்ய சிந்தியா, ஹர்ஷ் சிங் சவுகான் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 3 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் இருவருக்கும் மாநில பாஜக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments