பாக்., குடியரசு தினவிழாவுக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் விபத்து

0 530

பாகிஸ்தான் குடியரசு தினவிழாவுக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்நாட்டு விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில், விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

பாகிஸ்தான் குடியரசு தின விழா மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. அப்போது நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் விமானப்படை விமானங்களின் சாகசங்களும் இடம்பெறும்.

இந்நிலையில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 ரக விமானம், இஸ்லாமாபாத் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்நாட்டு விமானப்படையை சேர்ந்த விங் கமாண்டர் நவ்மான் அக்ரம் என்பவர் உயிரிழந்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments