திருப்பதிக்கு வந்தால் இதையெல்லாம் கொண்டு வாருங்கள்... தேவஸ்தானம்

0 33878

கொரானா தொற்று முன்னெச்சரிக்கையாக ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் மற்றும் சானிட்டரைசரை கொண்டு வருமாறு திருப்பதி- திருமலை தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

கோடை நெருங்கும் நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையான தரிசிக்க வருவார்கள் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பது குறித்து திருமலையில் தேவஸ்தான உயர் அதிகாரிகள் விவாதித்தனர்.

அதன்படி அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் தெர்மல் கன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுடன் சிறப்பு குழுவினர் சோதனை நடத்துவர். அதில் கொரானா அறிகுறிகள் இருப்பது தென்பட்டால் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

அதே போன்று இருமல், ஜலதோஷம், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள பக்தர்கள் தங்களது பயணத்தை தள்ளி வைக்குமாறும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments