மகளின் காதல் கணவரை கூலிப்படையை ஏவி கொன்ற தந்தை, விஷமருந்தி தற்கொலை

0 7777

தெலுங்கானாவில் 2 ஆண்டுகளுக்கு முன் மகளின் காதல் கணவரை அவர் கண்முன்னேயே கூலிப்படையை வைத்து வெட்டிக் கொன்ற தந்தை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நலகொண்டா மாவட்டம் மிரியாலாகுடாவைச் சேர்ந்த தொழிலதிபர் மாருதிராவின் மகள், அமிர்தா, பிரணய் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த மாருதிராவ், கடந்த 2018ஆம் ஆண்டு கூலிப்படையை ஏவி அமிர்தா கண்முன்னேயே பிரணையை வெட்டிக் கொன்றார்.

இந்த சம்பவத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாருதிராவ், 7 மாதங்களுக்குப் பின் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், சனிக்கிழமை ஹைதராபாத்திலுள்ள தனியார் தங்கும் விடுதியில் அவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

குற்ற உணர்ச்சியால் தனது தந்தை தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என அமிர்தா கூறியுள்ள நிலையில் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments