முதன்முறையாக முழுமையாக கொரோனாவை கட்டுப்படுத்திய கேரள அரசு

0 4920

இந்தியாவில் கொரானா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதன்முறையாக, கேரளாவில் கண்டறியப்பட்ட நோய் தொற்று தீவிர நடவடிக்கையால் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.

இதற்காக அம்மாநில அரசு போர்க்கால அடிப்படையில் மாநிலத்தின் சிறு பகுதிகள் வரையிலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக நிபா வைரஸால் அவர்கள் பெற்ற அனுபவம் சரியான நேரத்தில் கை கொடுத்தது.

விமான நிலையங்கள் அனைத்தும் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டதோடு, நோயால் பாதிக்கப்பட்ட மூவரும் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். மருத்துவத்துறை சார்ந்த இடங்களில் அதீத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சுவாச பரிசோதனைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களிடையே தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு, வதந்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments