தாயை ஏமாற்றி 6 மாத குழந்தையை கடத்திய பெண் CCTV அடிப்படையில் கைது

0 327

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் 6 மாத ஆண் குழந்தையை கடத்திய, தமிழகத்தை சேர்ந்த பெண்ணை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

சுவர்ணலதா எனும் பெண் கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, கடந்த ஒருவார காலமாக தனது குழந்தையுடன் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் அங்கு வந்த ஒரு பெண், சுவர்ணலதாவிற்கு உதவுவதாக கூறி புதிய ஆடைகளை வாங்கி கொடுத்துள்ளார். உடைகளை மாற்றிக்கொள்ள சுவர்ணலதா சென்ற சமயத்தில், குழந்தையை அந்த பெண் அங்கிருந்து எடுத்து சென்றுள்ளார்.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் புத்தூரில் வைத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் குழந்தையை மீட்டனர்.

தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த பெண் வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த அம்பிகா என்பதும், திருமணமாகி 14 ஆண்டுகளாகியும் தனக்கு குழந்தை இல்லாததால் குழந்தையை கடத்தியதாகவும் தெரிவித்துள்ளார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments