டெல்லி கலவரம் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து கண்காணிப்பு

0 462

டெல்லி கலவரம் தொடர்பாக, சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார்.

மக்களவையில் இதுதொடர்பாக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,தலைநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க டெல்லி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.

டெல்லி கலவரம் தொடர்பாக 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறிய நித்யானந்த ராய், சமூக வலைத்தளங்களில் வதந்தி மற்றும் போலி பிரசாரம் செய்வதை அரசு தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றார்.

மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை விசாரணை அதிகாரிகள் ஆய்வுசெய்து கலவரம் ஏற்படுத்தியவர்களை கைது செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதியில் 7 ஆயிரத்து 600 மத்திய ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர் என்றும் நித்யானந்த ராய் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments