நீராவியால் இயங்கும் ராக்கெட்டில் பயணித்தவர் பாராசூட் இன்றி கீழே விழுந்து உயிரிழப்பு

0 589

அமெரிக்காவில் நீராவியால் இயங்கும் ராக்கெட்டில் பயணித்தவர் பாராசூட் இன்றி கீழே விழுந்து உயிரிழந்தார்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த மைக் ஹூகஸ் என்பவர் நீராவியால் இயங்கும் ராக்கெட்டை தானே கண்டுபிடித்து இயக்கி வந்தார். அங்கிருந்த பாலைவனப்பகுதியில் சொந்தமாகத் தயாரித்த ராக்கெட்டில் அவ்வப்போது பயணித்து பாராசூட் மூலம் குதித்து சாகசம் செய்து வந்தார். இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒத்திகைக்காக மீண்டும் பறந்து பயணிக்க முயன்றார் மைக். அப்போது திட்டமிட்டபடி அவரது நீராவி ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.

ராக்கெட் சென்ற வேகத்தில் அவருடன் இணைக்கப்பட்டிருந்த பாராசூட் தனியே பிய்த்துக் கொண்டு சென்றுவிட்டது. இதனால் ராக்கெட்டில் இருந்த மைக் பல நூறு அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்து உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments