தங்கம் விலை உயர்வு...!
சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், ஒரு கிராம் 4 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது.
ஏற்கனவே ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 31 ஆயிரம் ரூபாயைக் கடந்து விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று 3,926 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம், இன்று 39 ரூபாய் உயர்ந்து 3,965 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நேற்று 31 ஆயிரத்து 408 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்று 312 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 1 ரூபாய் 20 காசுகள் உயர்ந்து, 51 ரூபாய் 80 காசுகளுக்கும், பார் வெள்ளி ஒரு கிலோ 1,200 ரூபாய் உயர்ந்து 51 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Comments