14 ஆண்டு சிறைவாசத்துக்கு பின்னர் மருத்துவரான ஆயுள்தண்டனைக் கைதி

0 989

கர்நாடகாவில் 14 ஆண்டுகள் சிறைதண்டனை முடிந்து வெளியே வந்த ஆயுள்தண்டனைக் கைதி, அதற்கு பின்னர் மருத்துவராகும் தனது கனவை எட்டிப்பிடித்துள்ளார். கலாபுராகி மாவட்டம் அப்சல்புரா பகுதியை சேர்ந்த சுபாஷ் பாட்டீல் என்பவர், 1997ல் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்த நிலையில் 2002ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

3ம் ஆண்டு மருத்துவ மாணவரான சுபாஷுக்கு கொலை வழக்கில் 2006ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சிறை தண்டனை அனுபவித்து வந்தவர், நன்னடத்தை காரணமாக 2016ம் ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் மருத்துவப் படிப்பை மீண்டும் தொடர்ந்து 2019ல் முடித்த அவர், எம்.பி.பி.எஸ் பட்டம் பெறுவதற்கு அவசியமான ஓராண்டு மருத்துவப் பயிற்சியையும் முடித்துள்ளார். தடைகளை தாண்டி தனது சிறுவயது கனவை சுபாஷ் பாட்டீல் 40 வயதில் எட்டிப்பிடித்துள்ளார்.

 

 watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments