RECENT NEWS

சென்னையில் 5 வகை போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே உடனடி அபராதம்
மிக்ஜம் புயல் எச்சரிக்கையையொட்டி மீட்புப் பணிக்கு பயிற்சி பெற்ற 18,000 காவலர் மற்றும் கமாண்டோ படையினர் தயார்

மிக்ஜம் புயல் எச்சரிக்கையையொட்டி மீட்புப் பணிக்கு பயிற்சி பெற்ற 18,000 காவலர் மற்றும் கமாண்டோ படையினர் தயார்

Dec 02, 2023

1385

மிக்ஜம் புயல் எச்சரிக்கையையொட்டி, மீட்பு நடவடிக்கை பயிற்சி பெற்ற 18 ஆயிரம் காவலர்கள் மற்றும் கமாண்டோ படையினர் தயார் நிலையில் உள்ளதாக தமிழகக் காவல் துறை தெரிவித்துள்ளது. மிக்ஜம் புயல் கரையைக் கடக்கும்போது ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கனமழை, வெள்ளப்பெருக்கில் இருந்து பொதுமக்களை மீட்பது குறித்து காவலர்கள் மற்றும் கமாண்டோ படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.பயிற்சி பெற்ற காவலர்கள் மாநில பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து செயல்படுவதற்காக பல்வேறு குழுக்களாகப் பிரித்து தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழகக் காவல் துறை தெரிவித்துள்ளது.இந்த நிலையில், பயிற்சி பெற்ற காவலர்கள் சென்னை முட்டுக்காடு பகுதியில் மீட்பு நடவடிக்கை ஒத்திகையில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒழிக்க களமிறக்கப்படும் 300 சிறப்பு கமாண்டோ படை வீரர்கள்..!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒழிக்க களமிறக்கப்படும் 300 சிறப்பு கமாண்டோ படை வீரர்கள்..!

Oct 29, 2023

1825

ஜம்மு காஷ்மீரில் தினமும் தீவிரவாதிகளுடன் போராடும் காவல்துறைக்கு உதவியாக பயிற்சி பெற்ற 300 சிறப்பு கமாண்டோ வீரர்கள் களமிறக்கப்படுகின்றனர். தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்கு எற்ப நவீனரக துப்பாக்கிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட வசதிகளுடன்  இந்த கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ளது. 43 காவல்நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள இந்த கமாண்டோக்கள், தீவிரவாதிகளைத் தேடி அழித்து ஒழிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.முதல்கட்டமாக 21 காவல்நிலையங்களுக்கு ஏற்கனவே அதிநவீன வசதிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக 22 காவல்நிலையங்கள் தீவிரவாத ஒழிப்புப் பணிக்கான ஆயுதங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மணிப்பூரில் குக்கி தீவிரவாதிகள் தாக்கியதில் காவல்துறை கமாண்டோ உயிரிழப்பு

மணிப்பூரில் குக்கி தீவிரவாதிகள் தாக்கியதில் காவல்துறை கமாண்டோ உயிரிழப்பு

May 12, 2023

1651

மணிப்பூரில் காவல்துறையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கமாண்டோ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 காவலர்கள் படுகாயமடைந்தனர்.பிஷ்னுபூர் மாவட்டத்தில் ட்ரோங்லாபி என்ற இடத்தில் ரோந்து சென்ற காவல்துறையினர் மீது குக்கி தீவிரவாதிகள் திடீரெனத் தாக்குதல் நடத்தினர். இதில் காவல்துறையைச் சேர்ந்த கமாண்டோ ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 காவலர்கள் படுகாயடைந்தனர்.இந்தத் தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் மீது குக்கி அமைப்பினர் தாக்கியதில் வீரர் ஒருவர் காயமடைந்தார்.இதனிடையே, சலவரத்தின்போது காவல்துறையினரிடம் கொள்ளையடிக்கப்பட்ட 284 ஆயுதங்களும், 6 ஆயிரத்து 700 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் கமாண்டோ படைத்தலைவர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!

காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் கமாண்டோ படைத்தலைவர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!

May 07, 2023

1253

பஞ்சாப் பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்தின் கமாண்டோ படை தலைவர் பரம்ஜித் பஞ்சவார் பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்தியாவின் பஞ்சாப் எல்லை அருகே அமைந்துள்ள லாகூர் நகரில் துப்பாக்கி ஏந்திய இரண்டு பேர் பரம்ஜித் சிங்கின் வீட்டுக்கு அருகே அவரை சுட்டுக் கொன்றனர்.அவருடைய காவலர் ஒருவரும் காயம் அடைந்தார். 59 வயதான பரம்ஜித் சிங் மீது பிரிவினைவாதம் கொலை, போதைப் பொருள் ஆயுதம் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன.

3 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு வீட்டிற்குள் பதுங்கிய இளைஞரை சுட்டு கொன்ற 'கமாண்டோ' படையினர்

3 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு வீட்டிற்குள் பதுங்கிய இளைஞரை சுட்டு கொன்ற 'கமாண்டோ' படையினர்

Mar 23, 2023

2336

தாய்லாந்தில், 3 பேரை சுட்டு கொன்றுவிட்டு வீட்டில் பதுங்கிய நபரை 14 மணி நேர போராட்டத்திற்கு பின் கமாண்டோ படையினர் சுட்டு கொன்றனர்.போதை பொருள் கடத்தல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜாராகுமாறு அனுவாட் என்ற 29 வயது இளைஞனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.இந்நிலையில், தன்னோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்கத்து வீட்டு நபர்கள் 2 பேரையும், ஒரு டெலிவரி பாயையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு, வீட்டின் 2ஆம் தளத்தில் அவன் பதுங்கிகொண்டான்.போலீசார் அவனது தாயாரை வரவழைத்து, மெகாபோன் மூலம் பேசவைத்த போதும் அனுவாட் வெளியே வராததால், கவச வாகனம் மூலம் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த கமாண்டோ படையினர், தங்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்ட அனுவாட்டை சுட்டு கொன்றனர்.

முதல் அமைச்சர் பாதுகாப்பு பணிக்காக, சஃபாரி போட்ட கமாண்டோ பெண் சிங்கங்கள்..!

முதல் அமைச்சர் பாதுகாப்பு பணிக்காக, சஃபாரி போட்ட கமாண்டோ பெண் சிங்கங்கள்..!

Mar 20, 2023

2803

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பளிக்கும் பணியில் மகளிர் கமாண்டோ காவல் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.தமிழக காவல் துறையில் மகளிர் பணியமர்த்தபட்டு 50ஆண்டுகால பொன்விழா கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மெய்காப்பாளராகவும் பெண்கள் கமாண்டோ படையினர் பணியாற்ற தொடங்கியுள்ளனர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனி பாதுகாப்பு பிரிவில் காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் தனுஷ் கண்ணகி தலைமையிலான பெண் கமாண்டோ படையினர், சஃபாரி ஷூட்டுடன் கூலர்ஸ் அணிந்து கெத்தாக இந்த பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து புறப்படும் நொடி முதல் அவர் மீண்டும் வீடு திரும்பும் வரை பெண்கள் கமாண்டோ படை ஆண் கமாண்டோக்களின் அதே சுறுசுறுப்புடன் கவனமாக இந்த பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். இந்த கமாண்டோ படையில் 9 பெண் கமாண்டோ வீராங்கனைகள் இடம் பெற்று உள்ளனர்.பெண் கமாண்டோக்களுக்கு தினமும் உயர் அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு நடைமுறை, சிலம்பம் தற்காப்பு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.ஆயுதப் பயிற்சி, கை துப்பாக்கி, ஏகே-47உள்ளிட்ட உயரக துப்பாக்கிகளின் பயிற்சிகளை பெற்றுள்ளனர். வெடிகுண்டுகளை கையாள்வது, அவற்றை செயலிழக்கச் செய்வது, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பிரித்து மீண்டும் இணைப்பது என பல்வேறு திறன்களையும் இந்த பெண் கமாண்டோ படையினர் ஒருங்கே பெற்றுள்ளனர்.தமிழக வரலாற்றில் முதன் முதலாக முதலமைச்சர் தனி பாதுகாப்பு பிரிவில் இதுபோன்ற பெண்கள் கமாண்டோ சிறப்பு படை அமைக்கப்பட்டு சஃபாரி உடை மற்றும் தனிச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சிங்கத்தை தலையில் வைக்கும் ஒரு வாய்ப்பு தனக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக உதவி ஆய்வாளர் தனுஷ் கண்ணகி மகிழ்ச்சி தெரிவித்தார்தன்னம்பிக்கையும், தைரியமும், உடல் வலுவும் இருந்தால் போதும் காவல் துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் பெண்கள் வியத்தகு உயரங்களை எட்ட இயலும்.

வங்காள தேசத்தின் கடற்படை கமாண்டோ வீரர்களுக்கு இந்திய ராணுவத்தினர் சார்பில் ஸ்கை டைவிங் பயிற்சி

வங்காள தேசத்தின் கடற்படை கமாண்டோ வீரர்களுக்கு இந்திய ராணுவத்தினர் சார்பில் ஸ்கை டைவிங் பயிற்சி

Nov 24, 2021

2064

வங்காள தேசத்தின் கடற்படை கமாண்டோ வீரர்களுக்கு இந்திய ராணுவத்தினர் சார்பில் ஸ்கை டைவிங் பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த 11 ஆம் தேதி தொடங்கிய இப்பயிற்சி 22 ஆம் தேதி நிறைவடைந்தது.இந்தப் பயிற்சியின் போது விமானத்தில் இருந்து பாராசூட்டில் தரையிறங்குவது உள்ளிட்ட சாகஸங்களை இந்திய ராணுவத்தினருடன் இணைந்து வங்காள தேச வீரர்கள் செய்து காட்டினர்.இந்தியா-வங்காளதேசத்தின் நட்புறவின் அடையாளமாக இப்பயிற்சி நடைபெற்றதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஆக்சன் அவதாரம் கமாண்டோ நடிகையின் மூக்கு உடைந்த சோகம்..! இன்ஸ்டண்டா இன்ஸ்டாவில் அப்பாலஜி..!

ஆக்சன் அவதாரம் கமாண்டோ நடிகையின் மூக்கு உடைந்த சோகம்..! இன்ஸ்டண்டா இன்ஸ்டாவில் அப்பாலஜி..!

Aug 04, 2021

5252

தாய் தந்தையின் பேச்சை மீறி ஆக்சன் படத்தில் லேடி கமாண்டோவாக நடித்து வந்த பாலிவுட் நடிகை சாரா அலிகானுக்கு படப்பிடிப்பின் போது மூக்கு உடைந்தது. இதையடுத்து அவர் மூக்கில் ஏற்பட்ட காயத்துடன் தாய் தந்தையிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.கேதார் நாத் என்ற இந்திப்படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு ஜோடியாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சாரா அலிகான். மூன்று திருமணங்களை செய்த பிரபல இந்தி நடிகர் சயிப் அலிகானுக்கும் முதல் மனைவி அம்ரிதா சிங்கிற்கும் பிறந்தவரான சாரா அலிகான் தன்னை இந்தி திரையுலகில் நிலை நிறுத்திக் கொள்ள புது புது முயற்சிகளை செய்து வருகின்றார்.அந்தவகையில் பட்டாலியன் பெண் கமாண்டோ ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்தில் கமாண்டோ வேடத்தில் ஆக் ஷன் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. தாய், தந்தை இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும் இருவருடனும் பேசிக் கொள்ளும் சாரா அலிகான் தனது ஆக்சன் அவதாரம் குறித்து பெற்றோரிடம் கூறி அனுமதி கேட்டுள்ளார்.ஆக்சன் காட்சிகள் என்றால் ஆபத்து இருக்கும் என்று சுட்டிக்காட்டி நடிக்க வேண்டாம் என்று கூறியதாகவும், அதனை மீறி சாரா அலிகான் இந்தப்படத்தில் கமாண்டோவாக நடித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.பெற்றோர் அச்சப்பட்டது போலவே அசாமில் நடந்த படப்பிடிப்பின்போது சாரா அலிகானுக்கு முக்குடைந்ததாக கூறப்படுகின்றது. இதனால் அந்த படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து அவசர சிகிச்சைக்கு பின்னர் மூக்கில் பிளாஸ்திரியுடன் இருக்கும் புகைப்படத்தையும், தனது மூக்கில் ஏற்பட்டுள்ள வெட்டுக் காயத்தையும் புகைபடம் மற்றும் வீடியோவாக இன்ஸ்டா கிராமில் பதிவிட்டுள்ள நடிகை சாரா அலிகான், தனது தாய் தந்தையரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்சாரா அலிகான் தனது முதல் படமான கேதார்நாத்தில் வேறு மதத்தை சேர்ந்த இளைஞனாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தை காதலித்து திருமனம் செய்வது போல நடித்திருந்ததால் அவருக்கு பாகிஸ்தானில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதனால் சாரா அலிகானின் மூக்கில் ஏற்பட்ட காயம் குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன.    View this post on InstagramA post shared by Sara Ali Khan (@saraalikhan95)

ஆப்கானிஸ்தானில் 22 கமாண்டோக்கள் தாலிபான்களால் சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானில் 22 கமாண்டோக்கள் தாலிபான்களால் சுட்டுக் கொலை

Jul 14, 2021

2590

தங்களிடம் சரணடைந்த ஆப்கானிஸ்தான் கமாண்டோ வீரர்களை தாலிபான் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்லும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.அந்நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள டவ்லத் அபாத் என்ற இடத்தில் ராணுவ முகாமை தாலிபான்கள் முற்றுகையிட்டனர். அப்போது முகாமில் இருந்த 22 கமாண்டோக்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களைக் கீழே போட்டு தாலிபான்களிடம் சரணடைந்தனர்.முதலில் அவர்களை விட்டு விடுவதாகக் கூறிய தாலிபான் தீவிரவாதிகள் திடீரென அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாகச் சுட்டுக் கொன்றனர். 

சத்தீஸ்கரில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கமாண்டோ வீரர் புகைப்படத்தை வெளியிட்டது மாவோயிஸ்ட்

சத்தீஸ்கரில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கமாண்டோ வீரர் புகைப்படத்தை வெளியிட்டது மாவோயிஸ்ட்

Apr 08, 2021

3188

சத்தீஸ்கரில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கமாண்டோ வீரர் புகைப்படத்தை மாவோயிஸ்ட்டுகள் வெளியிட்டுள்ளனர்.கடந்த 3ம் தேதி பீஜப்பூர் மாவட்ட எல்லையில் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 22 வீரர்கள் கொல்லப்பட்டனர்.இதில் கோப்ரோ படைப் பிரிவின் கமாண்டோ வீரர் ராகேஷ்வர் சிங் என்பவரைக் கடத்திச் சென்றனர். இந்நிலையில் ராகேஷ்வர் பனை ஓலையால் வேயப்பட்ட ஓரிடத்தில் அமர்ந்திருப்பது போன்ற படத்தை மாவோயிஸ்ட்டுகள் வெளியிட்டுள்ளனர்.இந்நிலையில் ராகேஷ்வரை விடுவிக்க அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும் என்று மாவோயிஸ்ட்டுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தையை விடுவிக்குமாறு மாவோயிஸ்டுகளுக்கு கமாண்டோ வீரரின் 5 வயது மகள் கண்ணீர் கோரிக்கை

தந்தையை விடுவிக்குமாறு மாவோயிஸ்டுகளுக்கு கமாண்டோ வீரரின் 5 வயது மகள் கண்ணீர் கோரிக்கை

Apr 06, 2021

3796

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் கடத்தி வைக்கப்பட்டுள்ள கோப்ரா கமாண்டோ வீரரான தந்தையை விடுவிக்குமாறு அவரது 5 வயது மகள் கோரிக்கை விடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த சனிக்கிழமை சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 22 பேர் உயிரிழந்தனர். ராகேஷ்வர் சிங் மின்ஹாஸ் என்ற கோப்ரா கமாண்டோ வீர ரை காணவில்லை.அவரை மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. காணாமல் போன வீரரை கண்டுபிடித்து தருமாறு அவரது மனைவியும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் நக்சல்களுக்குச் சொந்தமான துப்பாக்கித் தொழிற்சாலை தகர்ப்பு : கமாண்டோ படை போலீசார் அதிரடி

மகாராஷ்டிராவில் நக்சல்களுக்குச் சொந்தமான துப்பாக்கித் தொழிற்சாலை தகர்ப்பு : கமாண்டோ படை போலீசார் அதிரடி

Mar 06, 2021

2729

மராட்டிய மாநிலத்தில் நக்சல் அமைப்பினருக்குச் சொந்தமான துப்பாக்கி தொழிற்சாலையை போலீசார் தகர்த்தனர்.நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ள கட்சிரொலி (Gadchiroli) மாவட்டத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி தொழிற்சாலை இயங்கி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து கடந்த வியாழக்கிழமை 70 கமாண்டோ படை போலீசார் துப்பாக்கி தொழிற்சாலையை சுற்றி வளைத்தனர்.அப்போது அங்கிருந்த நக்சல்பாரிகள் கமாண்டோகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பி ஓடினர். இதில் கமாண்டோ படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.2 நாட்களாக தொழிற்சாலையை சோதனையிட்ட கமாண்டோ போலீசார் பின்னர் தொழிற்சாலையை இடித்து தரைமட்டமாக்கினர்.

அதிரடி கமாண்டோ பிரிவில் பெண்களை சேர்க்க சி.ஆர்.பி.எப். பரிசீலனை

அதிரடி கமாண்டோ பிரிவில் பெண்களை சேர்க்க சி.ஆர்.பி.எப். பரிசீலனை

Jan 22, 2021

994

அதிரடி கமாண்டோ படை பிரிவில் பெண்களை சேர்க்க சி.ஆர்.பி.எப். பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைவர் ஏ.பி.மகேஸ்வரி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் அதிரடி கமாண்டோ பிரிவான கோப்ரா படைப்பிரிவு, நக்சல்களை ஒடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது என்றார்.கோப்ரா பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டிய சிப்பாய்கள் மன மற்றும் உடல் மட்டத்தில் கடுமையான அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

BIG STORIES

“நம்ப பள்ளிக்கு ஒரு அடையாளம் வேணும்...” முன்னாள் மாணவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா..?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies