RECENT NEWS

பாகிஸ்தானின் ஸ்வாட் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா சென்ற 9 பேர் உயிரிழப்பு

BIG STORIES

விஷால்-தன்ஷிகா டும் டும் டும்... பேபியென அழைத்த தன்ஷிகா.. பட விழாவில் ரொமான்ஸ்

May 20, 2025 04:15 AM

1133

விஷால்-தன்ஷிகா டும் டும் டும்... பேபியென அழைத்த தன்ஷிகா.. பட விழாவில் ரொமான்ஸ்

விஷால்-தன்ஷிகா டும் டும் டும்... பேபியென அழைத்த தன்ஷிகா.. பட விழாவில் ரொமான்ஸ்

வருகின்ற ஆகஸ்ட் 29 ஆம் தேதி விஷால் பிறந்த நாளில் அவரை திருமணம் செய்துக் கொள்ள உள்ளதாக யோகி டா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை சாய்தன்ஷிகா அறிவித்துள்ளார். இதனை அதே மேடையில் நடிகர் விஷாலும் உறுதிப்படுத்தி உள்ளார்.

நடிகர் விஷாலுக்கு வருகிற ஆகஸ்ட் 29 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தனக்கும் விஷாலுக்குமான காதல் திருமணத்தில் முடிய உள்ளதாக இந்த அறிவிப்பை பேராண்மை, மாஞ்சாவேலு, அரவான், பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சாய்தன்ஷிகா வெளியிட்டார்.

சாய்தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள யோகி டா திரைபடத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆர்.வி.உதயகுமார், விஷாலும் சாய் தன்ஷிகாவும் காதலித்து வருவதாகவும், குழந்தை போல விஷாலை சாய் தன்ஷிகா பார்த்துக் கொள்ள வேண்டும் என வெடியை கொளுத்திப் போட்டார். அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பேரரசு உள்ளிட்டவர்களும் இதனையே பேச, படத்தின் இசை வெளியீட்டு விழா, விஷால்-சாய் தன்ஷிகாவின் காதலை அறிவிக்கும் மேடையாக மாறியது.

மேடையில் பேச வந்த சாய் தன்ஷிகா, இதற்கு பின்பு மறைப்பதற்கு ஒன்றும் இல்லை, என்ன பேபி சொல்லிடலாமா? என விஷாலிடம் கேட்டு விட்டு, விஷாலின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 அன்று நாங்கள் கல்யாணம் செய்து கொள்ள உள்ளோம் என்று கூறினார்.

காதலை உறுதிப்படுத்திய விஷாலும், என் வாழ்நாள் முழுவதும் தன்ஷிகாவை சிரிச்ச முகத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறினார்.

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பிறகு தான் திருமணம் என ஏற்கனவே கூறியிருந்ததால், இனிமேல் சேர் போட்டு அமர்ந்து கொண்டு சீக்கிரம் வேலையை முடிக்க சொல்வேன் என விஷால் கூறினார்.

திருமண தேதி அறிவிக்கப்பட்டதும் படக்குழுவினர் விஷால்-சாய்தன்ஷிகாவிற்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஏன் திமிங்கலம்.. நீதிபதி பொண்ணு போலீசிடம் ரூம் போட சொல்லுது ? அல்வா பெண் போலீஸ் சிக்கினார்..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies