நம்ம கடைக்கு தடை தாண்டி வாங்க..! அண்ணன் தம்பி சண்டை

0 1230

ண்பவம் படத்தில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கின்ற சண்டைகள் சுவாரஸ்யமாக இருக்கும் அதே பாணியில் அந்தியூரில் நகை கடை நடத்தி வரும் அண்ணன் தம்பிகளின் வியாபார சண்டை துண்டு பிரசுரம் வெளியிடும் அளவிற்கு வீதிக்கு வந்துள்ளது.

ஆண்பாவம் திரைபடத்தில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கின்ற சிறு சிறு சண்டைகள் கூட மிக சுவாரஸ்ய காட்சிகளாக இடம் பெற்றிருக்கும், அதே போல ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரபல நகை கடை அதிபரின் வாரிசுகள் இருவர் வயதான காலத்திலும் துண்டுபிரசுரம் வெளியிட்டு வியாபார சண்டை போட்டு வருவதுதான் வாட்ஸ் ஆப் முகனூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் லேட்டஸ்ட் வைரல்..!

தனது நகைகடையின் பெயரை வெளியிட்டு கைராசி, கால்ராசி எல்லாம் சொல்லி கடைக்கு விளம்பர படுத்துபவர்களை பார்த்திருக்கிறோம்..! தனது கடைக்கு வேலைக்கு 10 ஆம் வகுப்பு முடித்த பெண் தேவை என்ற விளம்பரத்தில் முன் கடைக்காரர் நம்ம கடை தெரியாமல் இருக்க போர்டு வைத்து மறைத்திருப்பார், மறைவு தாண்டி வரவும் என்று பங்காளி சண்டையையும் பிரகடனப்படுத்தி உள்ளார் மூத்தவரான நாகேஸ்வரன்..!

முதலில் இருப்பது அவரது தம்பி கடை என்றும் அதில் சின்னவர் கடை என்று பெரிய போர்டு வைத்துள்ளனர். மேலும் அவர் கடையில் இருந்து பார்த்தால் மூத்தவரின் கடை தெரியாமல் இருக்க வேண்டும் என்ற வியாபார தந்திரத்துடன் பிளாட்பாரத்தை மறித்து போர்டு ஒன்றும் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.

இதனை உணர்ந்து மூத்தவரான நாகேஸ்வரன் துண்டு பிரசுரம் மட்டும் அல்ல வீதியில் வைத்துள்ள போர்டிலும் மறைவு தாண்டி வந்து ஆதரவு தாரீர்..! என்று வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து வாசகம் எழுதி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

அண்ணன் தம்பி சண்டைகள் பலவிதம் அதில் இந்த நகைகடை பிரதர்ஸின் பிராபலம் பிட் நோட்டீசால் பிரபலம் ஆகி இருப்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments