1 கோடியே 89 லட்சத்து 70 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுள்ளனர் -அமைச்சர் காமராஜ்

0 399

தமிழகத்தில், ஒரு கோடியே 89 லட்சத்து 70 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பாக, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றுடள் ஆயிரம் ரூபாயும் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.

இந்தநிலையில், தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 30 ஆயிரத்து 431 குடும்ப அட்டைகள் பொங்கல் பரிசு பெற தகுதி உள்ளவை என்றும், ஞாயிறு மாலை 6 மணி வரை, ஒரு கோடியே 89 லட்சத்து 70 ஆயிரம் பேர் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

மீதமுள்ள 10 லட்சத்து 59 ஆயிரம் பேர் திங்கட்கிழமைக்குள் பெற்றுக்கொள்ளுமாறு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments