பிரதமர் நரேந்திர மோடியின் அன்பும் அரவணைப்பும் ஆறுதலும் மகத்தானது - இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

0 718

சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்த போது, பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறியும் ஆரத் தழுவியும் அன்பை செலுத்திய காட்சிகள் இணையத்திலும் ஊடகங்களிலும் வைரலாகப் பரவின.

இந்த அணைப்பும் ஆறுதலும் பிரதமரிடமிருந்து பல உயர்ந்த பண்புகளை தாம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை அளித்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்துள்ளார். சந்திரயான் 3 திட்டத்தை வெற்றியாக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது இஸ்ரோ.

சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைய லேண்டர் கருவி தரையிறக்கப்படும் போது ஏற்பட்ட தவறுகளே காரணமாக கூறப்படுகிறது. அந்த தருணத்தில் தாம் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் உடைந்து அழுத போது, பிரதமர் மோடி தம்மை தட்டிக் கொடுத்து தமது தலைமைப் பண்பை உணர்த்தியதாக சிவன் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments