சென்செக்ஸ் புதிய உச்சம்... நல்ல உயர்வு கண்ட நிஃப்டி

0 236

இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கி, வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுகிறது என்ற புகார் எழுந்தாலும், இந்திய பங்குச்சந்தைகள், அண்மைக்காலமாக, நல்ல ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

இந்த வகையில், இந்திய பங்குச்சந்தைகள், நல்ல உயர்வுடன், வர்த்தகத்தை தொடங்கி எதிர்கொண்டிருக்கின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், கடந்த வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்த வர்த்தக வார புள்ளிகளைக் காட்டிலும், இன்று, 170 புள்ளிகள் வரை உயர்ந்தது.

இதன் காரணமாக, இன்றைய சென்செக்ஸ், 41,185 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை அடைந்து, வர்த்தகத்தை தொடங்கியது. இதேபோன்று, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும், இரண்டாவது முறையாக புதிய உயர்வை கண்டு, வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 12,134 புள்ளிகளுடன் வர்த்தகத்தை எதிர்கொண்டிருக்கிறது.

கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி 12,158 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை, நிஃப்டி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 17 காசுகள் சரிந்து, 70 ரூபாய் 69 காசுகளாக உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments