எனக்கு "அந்த நோய்" இருக்கு.. பெண் வீட்டாரை அதிர வைத்த வாலிபர்! அம்பலமான நாடகம்

0 829

திருமணத்தில் விருப்பம் இல்லாத வாலிபர் ஒருவர் பெற்றோர் மற்றும் பெரியவர்கள் முடிவு செய்த திருமணத்தை நிறுத்த திட்டம் போட்டு நடத்தியுள்ள நாடகம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரை சேர்ந்த கிரண் குமார் என்ற வாலிபருக்கு திருமணம் செய்து வைக்க வீட்டு பெரியவர்கள் முடிவு செய்தனர். இதனை அடுத்து துவங்கி நடைபெற்ற பெண் பார்க்கும் படலத்தின் முடிவாக, ஒரு பெண்ணை கிரணுக்கு திருமணம் செய்து வைக்க இறுதி செய்தனர்.

பெண் பார்த்த போது கிரண் குமார் எதுவும் சொல்லாமல் அமைதியாக தான் இருந்துள்ளார். எனவே அவருக்கு சம்மதம் தான் என்று நினைத்து கடந்த டிசம்பர் 1-ம் தேதி கல்யாணம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கிரணுக்கு திருமணத்தில் நாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. இது தெரியாத குடும்பத்தினர் திருமண வேலைகளில் ஜரூராக இறங்கினர்.

இதை பார்த்த கிரண் எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்திவிட துடித்தார். தமிழ் திரைப்படம் ஒன்றில் வடிவேலுவின் தங்கையை பெண் பார்க்க செல்லும் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் பெண் பிடிக்காத காரணத்தால் அவர்களை பற்றி அவர்களே தூற்றி கொள்வது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதை கிரண் பார்த்திருப்பாரோ என்னவோ.? (பெங்களூரு நகரில் வசிக்கும் பல மாநில மக்களுக்கும் தமிழ், கன்னடம், தெலுங்கு உட்பட பல மொழிகள் பெரும்பாலும் தெரியும் )

இதனை அடுத்து பெண் வீட்டாரை தொடர்பு கொண்ட கிரண், மணப்பெண்ணின் பெற்றோரிடம் தனக்கு "எய்ட்ஸ்" இருப்பதாகவும், நிச்சயித்துள்ளபடி இந்த திருமணம் நடந்தால், உங்கள் மகளின் வாழ்க்கை பாழாகிவிடும். ஏன், உங்கள் பெண்ணுக்கும் கூட எனக்கு இருக்கும் கொடிய நோய் வந்துவிடும் எனவே இந்த திருமணத்தை ரத்து செய்துவிடுங்கள் என கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த பெண் வீட்டார் திருமணத்தை தள்ளி வைத்தனர்.

பின்னர் கிரணின் குடும்ப உறுப்பினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று எச்.ஐ.வி பரிசோதனை செய்தனர். ஆனால் பரிசோதனை முடிவு எதிர்மறையாக இருந்தது. பின்னர் குடும்பத்தினர் துருவி துருவி விசாரித்தபோது திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. அதான் இந்த எய்ட்ஸ் நாடகத்தை நடத்தினேன் என்றுள்ளார்.

இந்த தகவலை அறிந்த பெண் வீட்டார் கோபமடைந்து போலீசில் புகார் அளித்தனர். இதனை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, கிரண் குமாரை கைது செய்து ரிமாண்டிற்கு அனுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments