ஆயுத சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

0 284

சட்டவிரோதமாக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள், தயாரிப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் திருத்தப்பட்ட ஆயுத சட்ட மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி, தேச பாதுகாப்புக்காக இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுவதாக குறிப்பிட்டார்.

துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்பது சில இடங்களில் நடைபெற்று வருவதாகவும், அது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மக்களவையில் திங்கட்கிழமை மசோதா நிறைவேறியதை தொடர்ந்து, மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இந்தியாவில்
35 லட்சம் பேர் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 13 லட்சம் பேர் உரிமம் பெற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments