ஆந்திர - கர்நாடக எல்லைப் பகுதியில் சுற்றி வரும் யானைக்கூட்டம்

0 188

ஆந்திர - கர்நாடக மாநில எல்லையான குப்பம் பகுதியில் சுற்றி வரும் யானைக்கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வனப் பகுதிக்கு வந்த 30க்கும் மேற்பட்ட யானைகள் ஆந்திர எல்லைக்குள் நுழைந்துள்ளன.

சித்தூர் மாவட்டம் குடிப்பள்ளி, வேறுபுடி மற்றும் சாந்திபுரம் மாண்டலத்தில் உள்ள பல கிராமங்களில் இந்த யானைகள் கூட்டம் சுற்றி வருகிறது. இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் யானைகளை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments