சேலத்தில் வடமாநில இளைஞரை துப்பாக்கி முனையில் கைது செய்த பெங்களூர் போலீஸ்

0 7834

சேலத்தில் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், நடுரோட்டில் வடமாநில இளைஞரை துப்பாக்கி முனையில், பெங்களூர் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற சம்பவம் நடைபெற்றது.

சேலம் பால்மார்க்கெட் பகுதியில் வடமாநிலத்தைச்சேர்ந்த சேர்ந்த ஹரிஷ் என்பவர் மொத்த மளிகை கடை வைத்துள்ளார். நேற்று இரவு 9 மணி அளவில் செரி ரோடு பகுதியில் நின்று இருந்த போது, காரில் வந்த இரு நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரை காரில் ஏற்றிச்சென்றனர். அப்போது அங்கு சாதாரண உடையில் நின்றிருந்த ஆயுதப் படை காவல் உதவி ஆய்வாளர் ரவி அளித்த தகவலின் பேரில் அந்த காரை கருப்பூரில் போலீசார் மடக்கினர்.

விசாரணையில் தாங்கள் பெங்களூர் போலீசார் என்றும், அங்கு திருட்டு போன ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள பான்பராக், குட்கா புகையிலை பொருட்களை வாங்கியது சம்பந்தமாக, ஹரிஷை கைது செய்து அழைத்துச்செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து எப்ஐஆர் நகலை கருப்பூர் போலீசார் பெற்றுக்கொண்டு ஹரிசை அழைத்துச்செல்ல அனுமதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments