தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் வேலை வாய்ப்பு முகாம்

0 214

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பில், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட 7 மண்டல மையங்கள் வாரியாக வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டிருப்பதாக அந்த பல்கலை கழக துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில், கடந்த 2 நாட்களாக நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். அவர்களில் 321 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணியாணை வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் பார்த்தசாரதி, திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் அனைத்து பாடப்பிரிவுகளும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பிற்கு உகந்தவை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments