டெஸ்லா Model X-க்கு 5 நட்சத்திர அந்தஸ்து..!

0 413

டெஸ்லா(Tesla)நிறுவனத்தின் எஸ்.யூ.வி ரக, எலக்ட்ரிக் சொகுசு காரான "மாடல்-எக்ஸ்" (Model X), ஐரோப்பிய வாகன பாதுகாப்பு முகமையின் 5 நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கிறது.

யூரோ என்கேப் (Euro NCAP) என்ற அமைப்பு, ஐரோப்பிய நாடுகளில் விற்பனையாகும் கார்களுக்கு தர பரிசோதனை நடத்தி, நட்சத்திர அந்தஸ்து வழங்குகிறது.

இந்த வகையில், யூரோ என்கேப்பின் சோதனையை,மாடல் எக்ஸ்., மேற்கொண்டது. இந்த சோதனையின்போது, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில், அந்த கார், இரும்பு தடுப்பின் மீது மோதவிடப்பட்டது.

கார் மோதும்போது ஏற்படும் சேதம், ஏர்பேக் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களின் இயக்கம், மோதிய வேகத்தில் வாகனத்தின் நிலைதடுமாறும் தன்மை ஆகியவை கணிக்கப்பட்டு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த சோதனையில், டெஸ்லா மாடல்-எக்ஸ் சொகுசு கார், ஐந்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments