இந்தி நடிகர் அமீர் கான் பொற்கோவிலில் வழிபாடு

0 338

லால் சிங் சட்டா என்ற புதிய படத்தில் சீக்கியராக நடித்து வரும் நடிகர் அமீர் கான், பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பில் பங்கேற்ற பின்னர் நேற்று அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனித் தலமான பொற்கோவிலுக்கு வருகை தந்தார்.

அங்கு குளத்தில் சீக்கியர் வழக்கப்படி கைகால்களை சுத்தம் செய்து பொற்கோவிலுக்குள் பிரார்த்தனை செய்த அவர் இந்த ஆலயம் மனதுக்கு மிகுந்த அமைதியைத் தருவதாக குறிப்பிட்டார். தாம் ஏற்கனவே இங்கு இருமுறை வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments