தமிழக அரசை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை

0 277

இடஒதுக்கீட்டின் அடிப்படையிலான பலன் அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைய  தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பணி நிபந்தனை சட்டத்தில் உள்ள சில பிரிவுகளுக்கு எதிரான வழக்கில், அதிமுக அரசு தோல்வியை தழுவியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஆட்சியில் 100 பாயிண்ட் ரோஸ்டர் முறை, 200 பாயிண்ட் ரோஸ்டர் முறையாக உயர்த்தப்பட்டு, 69 சதவீத இடஒதுக்கீட்டின் பலன் முழுமையாகக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், சீனியாரிட்டியில் இருந்த ரோஸ்டர் முறையைப் பாதுகாக்க அதிமுக அரசு தவறவிட்டதாக குற்றம்சாட்டி இருக்கிறார்.

2016-ல் பிறப்பித்த சட்டத்தையும்  உரிய சட்ட நுணுக்கங்களுடன் நிறைவேற்றாததால்,  அந்த சட்டத்தில் உள்ள சில பிரிவுகளை உயர்நீதிமன்றம் தற்போது ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசின் இந்த தோல்வியால் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பதவி உயர்வுகளும்,  இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய சமூகநீதியின் முழுப் பயனும் பேராபத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments