டெங்கு நோயாளிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளபடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

0 283

டெங்கு நோய்க்கு சிகிச்சைக்கு வருவோருக்கு அரசு அறிவுறுத்தியுள்ளபடி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அதை மீறும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு எதிராக தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். 

ஆவடி அரசு மருத்துவமனையில்  அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பெஞ்சமின் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். ஆவடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளி பிரிவில் காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு பெற்று வருவோரை நேரில் சந்தித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

பின்னர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தையும் அவர் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், டெங்கு நோய்க்கான சிகிச்சை குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments