நீண்ட தூரம் பயணித்த குவாண்டாஸ் விமானத்தில் முன்னேற்பாடுகளால் பயணச்சோர்வு ஏற்படவில்லை என தகவல்

0 356

உலகில் நீண்ட தூரம் இடைவிடாது பயணித்த குவாண்டாஸ் விமானத்தில் பயணித்தவர்களுக்கும், அதன் ஊழியர்களுக்கும் ஜெட்லாக் ஏற்படுவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த குவாண்டாஸ் நிறுவன விமானம், நியூயார்க் முதல் சிட்னி வரையிலான 16 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்தை, பத்தொன்போதரை மணி நேரத்தில் எங்கும் இடைநில்லாது கடந்து சாதனை படைத்தது.

முதல்முறையாக நிகழ்த்தப்பட்ட இந்த சாதனைப் பயணத்தில் பயணிகளுக்கும், ஊழியர்களுக்கும் ஜெட்லாக் ஏற்படுவதை தவிர்க்க சில முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

விமானம் பயணத்தை துவங்கிய போதே பயணிகளின் கடிகாரத்தில் சிட்னியின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் சிட்னியில் இரவாகும் வரை, அதாவது பயணம் துவங்கிய முதல் 6 மணி நேரத்திற்கு பயணிகள் விழித்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும் அனைவரது உடல் நிலை, ரத்த அழுத்தம், மனநிலை உள்ளிட்டவையும் கண்காணிக்கப்பட்டன. சுழற்சி முறையில் விமானிகள் விமானத்தை இயக்கினர். இந்த முன்னேற்பாடுகளால், பயணிகள் மற்றும் ஊழியர்கள் யாருக்கும் பெரியளவில் பயணச்சோர்வு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments