வேகமாக நிரம்பி வரும் பவானிசாகர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0 774

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து, 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.

102 அடி வரை மட்டுமே தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என்ற நிலையில், எந்த நேரமும் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதனையடுத்து பவானி ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டது.

ஆற்றில் இறங்கி துணி துவைப்பதோ, குளிப்பதோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதோ, வெள்ளத்தின் முன் நின்று புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments