நீட் ஆள்மாறாட்ட வழக்கில் புகாருக்கு ஆளான மாணவர் விசாரணைக்கு ஒரு நாள் ஆஜராக முடியுமா?

0 851

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் புகாருக்கு ஆளான மாணவர் சிபிசிஐடி விசாரணைக்கு ஒரு நாள் ஆஜராக முடியுமா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

ஆள்மாறாட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணவர் உதித்சூர்யா குடும்பத்துடன் தலைமறைவாக உள்ள நிலையில், அவர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அதிகாரிகள் திருப்தி அடைந்ததன் அடிப்படையிலேயே தாம் கல்லூரியில் சேர்ந்ததாகவும் மன அழுத்தம் காரணமாக படிப்பை நிறுத்தியதாகவும் அந்த மனுவில் உதித் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு 20 வயதே ஆவதால் எதிர்கால நலன் கருதி க.விலக்கு காவல்நிலையத்திலுள்ள தன் மீதான வழக்கில் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என அவர் மனுவில் கோரியிருந்தார். இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, நீட் தேர்வில் இது போல முறைகேடு நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டால் அது எளிதாக கடந்து செல்லக்கூடிய விசயம் அல்ல" என தெரிவித்தார்.

தொடர்ந்து, அரசுத்தரப்பில் உதித் சூர்யா கலந்தாய்வில் கலந்து கொண்டதே சந்தேகத்திற்கிடமானதாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், உதித் சூர்யா சிபிசிஐடி முன்பாக ஒருநாள் நேரில்  ஆஜராகி விளக்கமளிக்க முடியுமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதே சமயம் வழக்கு  சிபிசிஐடியிடம்  மாற்றப்பட்டுள்ள நிலையில், ஆவணங்கள் முழுமையாக எப்போது சிபிசிஐடியிடம் வழங்கப்படும் என அரசுத்தரப்பிலும் கேட்டுத்தெரிவிக்குமாறு  உத்தரவிட்டு வழக்கை மதிய அமர்விற்கு ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments