மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் பகுதியில் இடைவிடாத கனமழை

0 183

மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் (neemuch) பகுதியில் இடைவிடாமல் பெய்துவரும் கனமழையாலும், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட அதிக அளவு நீர் புகுந்திருப்பதாலும் அப்பகுதியே வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.

தொடர்ந்து பல நாள்களாக இடைவிடாமல் கனமழை பெய்ததால், ராம்புரா தாலுகாவில் உள்ள நீலியா ஏரி நிரம்பியது. இதையடுத்து அந்த ஏரியின் பாதுகாப்பு கருதி, அதிலிருந்து இருந்து அதிக அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த நீர், நீமுச் பகுதியில் புகுந்துள்ளது. இதேபோல் கனமழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நீமுச் பகுதியில் பல அடி உயரத்துக்கு வெள்ளம் தேங்கியுள்ளது. வீடுகளும், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களும் வெள்ளத்தில் மூழ்கி காட்சியளிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments