கீழடியில் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை நிரப்பிய மழைநீர்

0 431

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் அங்கு பெய்து வரும் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

கீழடியில் பண்டைய தமிழர் நாகரீகத்தை அறியும் வகையில் 4 கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்து 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கடந்த இரு நாட்களாக கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அகழ்வாராய்ச்சிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் நீர் நிரம்பியது.

அதனை மின் மோட்டார்கள் கொண்டும், வாளிகள் கொண்டும் இறைத்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரட்டைச் சுவர் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் நீர் தேங்காமல் இருக்க தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டது. அதன் மீது தேங்கியுள்ள தண்ணீரையும் தொழிலாளர்கள் வாளிகள் கொண்டு அப்புறப்படுத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments