இரண்டே நாட்களில் 2 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை..!

0 526

கோவை அருகே இரண்டே நாட்களில் 2 பேரை மிதித்து கொன்ற காட்டு யானையின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

துடியலூர் அடுத்த கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று இரவு விக்னேஷ் மற்றும் பிரேம் கார்த்தி என்ற இருவர் மது அருந்தி கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த காட்டுயானை விரட்டி மிதித்ததில் பிரேம் கார்த்தி என்பவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த வனத்துறையினரும் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் பன்னிமடை சஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரை தாக்கி கொன்ற நிலையில் மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments