நம்ம ஊரு ஆண்கள் பாவம்..! டிக்டாக் பெண்கள் திடீர் புரட்சி

0 676

டிக்டாக்கில் அதிக லைக்குகளை பெற வேண்டும் என்பதற்காக ஆண்களின் வேதனைகளை உணர்ந்த ஞானிகளாக சில பெண்கள் வீடியோ பதிவிட்டு திடீர் புரட்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சமூகத்தில் பெண்களுக்காக குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்களுக்கு மத்தியில் ஆண்களுக்காகவும் குரல் கொடுக்கும் டிக்டாக் புரட்சி பெண்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

பெண்களை மட்டம் தட்டுவதுதான் ஆண்களுக்கான உரிமைக்குரல் என்ற தவறான புரிதலை தமிழ் சினிமாக்கள் நம்மிடம் விதைத்து சென்றிருக்கின்றது..! அதனை சரிக்கட்டும் வகையில் நம்ம ஊர் பெண்கள் சிலர் டிக்டாக்கில் ஆண்களுக்காக குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள்..! மனைவி சண்டையிட்டால் அதனை சாதுர்யமாக எதிர் கொள்ளும் கணவனை ஞானியுடன் ஒப்பிட்டு புகழ்கின்றனர்...

இன்னும் ஒருபடி மேலே போய் ஆண்களின் கால்களை பெண்கள் பிடித்து விட வேண்டும் என்கிற அளவுக்கு ஆருடம் கூற தொடங்கி விட்டனர் சில பெண்கள். அதனால் தான் அதிக லைக்குகளையும் ஷேர்களையும் வாரிக்குவித்துள்ளது இந்த வீடியோ..! ஆண்களை மாற்ற நினைக்காதீங்க , அவங்களுக்கு பிடித்த மாதிரி பெண்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று புத்திசொல்வதெல்லாம் வெற லெவல் தான்..!

ஆண்களுக்கு அழுறதுக்கு கூட சுதந்திரம் இல்லை என்று வேதனை தெரிவிக்கும் பெண்மணி கணவனை அடக்கி காலுக்கடியில் வைத்து வாழ நினைத்தால் என்ன மாதிரி விபரீதம் ஏற்படும் என்பதையும் விவரிக்கிறார்.

ஆண்கள் படும் கஷ்டம் கடவுளுக்கு மட்டும் தான் தெரியும் என்று பெண் காட்டுகிற பரிதாபம் அதிக லைக்குகளை அள்ளி இருக்கின்றது. டிக்டாக் வீடியோவில் ஆண்களுக்காக குரல் கொடுப்பது, புகழ்வது எல்லாம் லைக்கிற்காக மட்டுமே என்றும் எடுத்துக் கொள்ள முடியாது. சில பெண்கள், ஆண்களின் வலியை உணர்ந்து கூட பதிவிட்டிருக்கலாம்..!

உண்மையில் பெரும்பாலான வீடுகளில் நடப்பது என்னவோ கோவை சரளா கோபத்தில் வடிவேலுவை புரட்டி எடுக்கும் சினிமா காமெடிக்காட்சி தான்...! என்பதே கசப்பான உண்மை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments