மம்தா பானர்ஜிக்கான அரசியல் வியூக வகுப்பாளராகிறார் பிரசாந்த் கிஷோர்

0 905

பிரதமர் நரேந்திர மோடி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோரின் அரசியல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோர், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியோடு இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2014ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடியின், நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னணியில் இருந்தவர்களில் மிக முக்கியமானவர் பிரசாந்த் கிஷோர். இதனைத் தொடர்ந்து, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரோடு இணைந்து பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், பின்னாளில், ஐக்கிய ஜனதா தளத்திலேயே ஐக்கியமானார். 

இதையடுத்து, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின், சிறப்பு ஆலோசகராகவும், அரசியல் வியூக வகுப்பாளராகவும், மாறினார். ஜெகன்மோகன் ரெட்டியின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தற்போது, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியோடு இணைந்து பணியாற்ற, பிரசாந்த் கிஷோர் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்குவங்க மாநிலத்தில், 2021ஆம் ஆண்டு, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரசாந்த் கிஷோர், மம்தா பானர்ஜி இடையிலான சந்திப்பு, கொல்கத்தாவில், இன்று நடந்தேறியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments