நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை தொடர்பான சர்ச்சை

நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுவித்தது தொடர்பாக மத்திய அரசின் அனுமதியை புனே ஏரவாடா சிறை அதிகாரிகள் பெறவில்லை என்று தகவல் அறியும் சட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிறையில் இருந்து பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவுக்கு அளிக்கப்பட்ட பதிலில் இது அம்பலமாகியுள்ளது. மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுதம் மறைத்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சஞ்சய் தத்துக்கு 2013ம் ஆண்டில் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் தண்டனைக்காலம் முடியும் முன்பாகவே நன்னடத்தை காரணமாக கடந்த 2016ம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கு மாநில அரசே பொறுப்பு என்று தற்போது தெளிவாகியுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பான மாநில அரசின் பரிந்துரைக்கு தமிழக ஆளுநர் தரப்பில் இருந்து பதில் வராதது குறிப்பிடத்தக்கது.
Comments