மத்திய - மாநில அரசுகளை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே டி.டி.வி.தினகரன் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்

0 523

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து சேலத்தில் தடையை மீறி டிடிவி தினகரன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தினகரன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசால் கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படுவதாக கூறினார்.

அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ், பொதுமக்கள் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் சேலத்தின் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாநகருக்குள் செல்லும் அனைத்து பேருந்துகளும் சுமார் மூன்று மணி நேரம் முடங்கின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments