காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சியுடன் காங். கூட்டணி பேச்சுவார்த்தை

0 427

மக்களவை தேர்தலில் தங்களது கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்க சம்மதித்தால் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயார் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

6 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்களவை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஒமர் அப்துல்லா, தங்களது தேசிய மாநாடு கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

காஷ்மீரில் 3 தொகுதிகளை தங்களது கட்சிக்கு ஒதுக்க சம்மதித்தால் மற்ற தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று காங்கிரஸ் மேலிடத்திடம் கூறி விட்டதாக அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments