கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க பாஜக முயற்சி - அமைச்சர் சிவக்குமார்

0 373

மும்பை விடுதியில் கர்நாடகக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரைப் பாஜக தலைவர்கள் சந்தித்ததாகக் கர்நாடக அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயல்வதாக மாநில நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். மும்பை விடுதியில் கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மூவர் பாஜக தலைவர்களுடன் இருந்ததாகவும், அவர்களுக்கு எவ்வளவு பணம் விலை பேசப்பட்டது என்பது தனக்குத் தெரியும் என்றும் சிவக்குமார் தெரிவித்தார்.

ஆட்சியைக் கவிழ்க்கும் பாஜகவின் முயற்சி வெற்றிபெறப்போவதில்லை என்றும் சிவக்குமார் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments