ஆசியான் மற்றும் கிழக்காசிய நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றார் மோடி..

0 593

உலகம் முழுவதும் சுமார் 200 கோடி பேருக்கு வங்கி சேவையை வழங்கும் அபிக்ஸ் திட்டத்தை இன்று சிங்கப்பூரில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்றிரவு டெல்லியில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டார். வெளியுறவுத்துறை அதிகாரிகள் பிரதமரை பாலம் விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர். இன்று அதிகாலை சிங்கப்பூர் சென்றடைந்த மோடிக்கு, இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் நிதித் தொழில்நுட்பம் வழங்கும் நிறுவனங்களின் 30 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்கும் fintech கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார்.இக்கூட்டத்தில் அபிக்ஸ் எனும் திட்டத்தை மோடி தொடங்கி வைக்கிறார். உலகம் முழுவதும் வங்கிக் கணக்கு இல்லாத சுமார் 200 கோடி மக்களுக்கு வங்கி சேவையை இத்திட்டம் வழங்கும். ஹைதராபாத், கொழும்பு, லண்டன் உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்படும் பின்டெக் தொழில்நுட்ப வசதியால் 23 நாடுகளில் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிசேவையை வழங்கும் இத்திட்டத்தை பிரதமர்தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தில் கிழக்காசிய உச்சிமாநாடு ஆசியான் மாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டுக்கு இடையே சிங்கப்பூர் பிரதமர் மற்றும் அமெரிக்க துணை அதிபர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments