ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ராஜினாமா

0 467

ஐக்கிய நாடுகள் சபைக்காக அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த  ஆண்டு அந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட அவர், ஐக்கிய நாடுகள் சபையில்  அமெரிக்காவின் கொள்கைகளை முன் வைப்பதில் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் அவர் தமது தூதர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் நிக்கி ஹாலே எதற்காக பதவியை துறந்துள்ளார் என்பதும், அவரது பதவி துறப்பை டிரம்ப் ஏன் ஏற்றுக் கொண்டார் என்பதற்கும் விளக்கம் அளிக்கப்படவில்லை.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை விரைவில் விளக்கம் அளிக்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே தெற்கு கரோலினா மாகாணத்தின் ஆளுநராகவும் இருந்தவர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments