அமெரிக்க தேசியக் கொடியை தவறாக வரைந்த டிரம்பின் செயலுக்கு இணையதளங்களில் கண்டன மழை

0 1119

அமெரிக்க கொடியை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தவறாக வரைந்தது சர்ச்சை உருவாக்கி உள்ளது.

அந்நாட்டின் ஓகியோ மாகாணத்தின், கொலம்பஸ் நகரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு டொனால்ட் டிரம்ப் தமது மனைவியுடன் சென்றார். அங்கு சிகிச்சை பெறும் குழந்தைகளிடம் நலம் விசாரித்த டிரம்ப் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள நல மையத்திற்கு சென்றார். அங்கு படங்களுக்கு வண்ணம் தீட்டும் பணியில் குழந்தைகள் ஈடுபட்டுள்ளதை கண்ட அவர், தாமும் வண்ணம் தீட்டம் பணியில் ஈடுபட்டார். அப்போது, அமெரிக்கா கொடியின் படத்திற்கு வண்ணம் தீட்டிய அவர், அதில் தவறிழைத்தது தெரியவந்துள்ளது.

இடது மூலையில், நீல சதுரத்தில் வெண்ணிற நட்சத்திரங்களையும், 13 சிவப்பு, வெள்ளை கோடுகளையும் கொண்டது அமெரிக்க கொடி. ஆனால் டிரம்ப், சிவப்பு, வெள்ளை கோடுகளுக்கு பதில் நீல வண்ண கோடுகளை வரைந்தது இப்போது சர்ச்சையை உருவாக்கி உள்ளது. அதிபர் பதவியில் உள்ள ஒருவர், தமது நாட்டின் கொடியை தவறாக வரைந்ததற்கு அமெரிக்கா முழுவதும் கண்டனக்குரல் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments