ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
தமிழ்நாடு
இனி., லாரிகளின் கேபின்களில் AC கட்டாயம்.. 47 டிகிரி புழுக்கத்தில் தவித்த ஓட்டுநர்களுக்கு விடிவு..
Nov 19, 2025 11:33 AM
198
இனி., லாரிகளின் கேபின்களில் AC கட்டாயம்.. 47 டிகிரி புழுக்கத்தில் தவித்த ஓட்டுநர்களுக்கு விடிவு..
மத்திய அரசின் உத்தரவின் படி, புதிய லாரிகளின் கேபின்களில் ஏசி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது லாரி ஓட்டுநர்களின் வசதிக்காகவும், இன்ஜின் வெப்பத்தின் தாக்கத்தால் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விதி நடப்பு ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது...
லாரி ஓட்டுநர்கள் வெளிப்புற வெப்பம் மற்றும் என்ஜின் வெப்பம் என 47 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில், நாளொன்றுக்கு சராசரியாக 14 மணி நேரம் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தக்காளி போன்ற காய்கறி லோடுகள் ஏற்றி செல்லும் போது எங்கேயும் நிறுத்தாமல் ஓட்டுனர்கள் லாரிகளை இயக்கி வருகின்றனர்.
என்ஜினிலிருந்து வெளியாகும் அதிகப்படியான வெப்பத்தால், லாரி ஓட்டுநர்கள், கிளீனர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, தொடர்ந்து பல மணி நேரம் இடைநிற்றல் இன்றி லாரிகளை இயக்குவதால், சோர்வடைந்து விபத்துகளும் ஏற்படுகிறது. இந்த சூழலில் தவித்து வந்த நிலையில் தான், மத்திய அரசின் புதிய விதிமுறைகளால் தற்போது லாரிகளின் கேபின்களில் ஏசி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய அறிவிப்பால், நாமக்கல்லில், ஏற்கனவே சுறுசுறுப்பாக இயங்கி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி பாடி கட்டும் தொழிலகங்கள், தற்போது, கேபின்களின் ஏசி கட்டாயம் என்ற உத்தரவால், மேலும் சுறுசுறுப்பு அடைந்திருக்கின்றன.
இதுகுறித்து பேசிய லாரி பாடி கட்டும் தொழிலகத்தை நடத்தி வரும் ராஜ்குமார், மத்திய அரசின் புதிய விதிமுறைகளின்படி, அனைத்து கனரக வாகனங்களின் கேபின்களில் ஏசி பொருத்தப்பட்டு வருவதாக கூறினார்.
லாரிகளின் கேபினில் ஏசி பொருத்துவதற்கு, வழக்கத்தை விட கூடுதலாக 40 ஆயிரம் ரூபாய் செலவு ஆகும் என்றும் அவர் கூறினார். வழக்கமாக கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஏசி போட்டால் மைலேஜ் குறையும் என்று கூறப்படும் நிலையில், அந்தளவிற்கு, லாரி கேபினில் பொருத்தப்படும் ஏசியால், மைலேஜ் பெரியளவில் குறையாது என்றும், லாரி பாடி கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள ராஜ்குமார் தெரிவித்திருக்கிறார்.
இன்ஜின் வெப்பத்திற்கு பயந்தே ஓட்டுநர்கள் பணிக்கு வருவதை இளையோர் தவிர்த்து வந்த நிலையில், தற்போது கேபினில் ஏசி கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவு, லாரி தொழிலை நோக்கி இளையோரை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu