RECENT NEWS

தேர்வு முடிந்து வீடு திரும்பிய 12 ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை..! துப்பட்டாவால் கழுத்தை நெரித்த கொடூரம்..

தேர்வு முடிந்து வீடு திரும்பிய 12 ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை..! துப்பட்டாவால் கழுத்தை நெரித்த கொடூரம்..

Mar 12, 2026

BIG STORIES

அடுத்தடுத்து அரங்கேறிய கொலைகள்.. நிலப் பிரச்சனையில் பறிபோன உயிர்கள்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

May 27, 2025 01:09 AM

396

அடுத்தடுத்து அரங்கேறிய கொலைகள்.. நிலப் பிரச்சனையில் பறிபோன உயிர்கள்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

அடுத்தடுத்து அரங்கேறிய கொலைகள்.. நிலப் பிரச்சனையில் பறிபோன உயிர்கள்..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நிலப் பிரச்சனையில் தனது தாய்மாமனை வெட்டிக் கொன்ற நபர் ஜாமீனில் வெளிவந்த நிலையில், மனைவி கண்முன்னே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

ஜோலார்பேட்டையை அடுத்த வணக்கம்பட்டியைச் சேர்ந்த திம்மராயன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருடைய சகோதரி மகன் சக்ரவர்த்தி, தனது நிலத்தை அடமானம் வைத்து ஒருவரிடம் 15 லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.

அந்தக் கடன் தொகை வட்டியோடு சேர்த்து 20 லட்சம் ரூபாயைக் கடந்த நிலையில், தனது தாய்மாமன் திம்மராயனை அணுகி, உதவி கேட்டுள்ளார்.

20 லட்சம் ரூபாயைக் கொடுத்து நிலத்தை மீட்ட திம்மராயன், 28 லட்சம் ரூபாய் கொடுத்தால் நிலத்தைக் கொடுப்பேன் என சக்ரவர்த்தியிடம் பேரம் பேசியதாகத் தெரிகிறது.

சொந்த மாமனே இப்படி கூடுதல் தொகை கேட்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சக்ரவர்த்தி, கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி வாழைத்தோப்பில் வைத்து திம்மராயனை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்துவிட்டு ஏலகிரி மலை காப்புக் காட்டில் பதுங்கி இருந்த சக்ரவர்த்தியை ஒன்பது நாட்கள் கழித்துப் போலீசார் கைது செய்தனர்.

தந்தையைக் கொலை செய்த சக்ரவர்த்தியைப் பழிதீர்க்க திம்மராயனின் மகன் பரத் காத்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு சக்ரவர்த்தி ஜாமீனில் வெளிவந்தார்.

அவரது நடவடிக்கையை உன்னிப்பாக நோட்டம் விட்டு வந்த பரத், காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட மனைவியுடன் புறப்பட்ட சக்ரவர்த்தியைப் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

வழியில் பொன்னேரியிலுள்ள கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளிய வந்த சக்ரவர்த்தியை மடக்கிய பரத் தலைமையிலான கும்பல், மனைவி கௌரி கண்முன்னே அவரை சரமாரியாக வெட்டியுள்ளது.

கணவனைக் காப்பாற்ற முயன்ற கௌரிக்கும் கையில் வெட்டு விழுந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சிகிச்சைப் பலனின்றி சக்ரவர்த்தி உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார், கொலை நடந்த ஒரு மணி நேரத்தில் அச்சமங்கலத்தில் வைத்து பரத் உள்ளிட்ட 5 பேர் கும்பலை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

பழிக்குப் பழியாக அரங்கேறிய இந்தப் படுகொலை சம்பவம், ஜோலார்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

தேர்வு முடிந்து வீடு திரும்பிய 12 ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை..! துப்பட்டாவால் கழுத்தை நெரித்த கொடூரம்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies